திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (17:27 IST)

இந்த சாக்லேட் பாய் ஹீரோவை ஞாபகம் இருக்கா ? வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அப்பாஸ் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார். இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின.

இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார். இந்நிலையில் அவர் இப்போது நியுசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். அங்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் முக்கியப் பதவியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளாக அவரைப் பற்றிய எந்த தகவல்களும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அப்பாஸ், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் குண்டான உடலோடு கிட்டத்தட்ட அங்கிள் தோற்றத்துக்கு மாறியுள்ளார் அப்பாஸ். அவரின் இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.