1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 ஜூலை 2017 (15:27 IST)

ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற இரண்டு படங்கள்!

கடந்த வாரம் ஜூலை 21 வெள்ளிக்கிழமை வெளியான, ’விக்ரம் வேதா’, ’மீசைய முறுக்கு’  படங்களுக்கு தமிழகம்  முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. இதே போல ஆங்கில படமான, கிறிஸ்டோபர் நோலனின், ’டுன்கிர்க்’, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படமான, ‘பிடா’ ஆகிய திரைப்படங்களும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளன.

 
விக்ரம் வேதா, மீசைய முறுக்கு இந்த இரண்டு படத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர், விமர்சனங்களும் நன்றாக  வந்துள்ளது. அதோடு ஹாலிவுட் படமான Dunkirk படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
 
விக்ரம் வேதா ரூ. 1.71 கோடியும், மீசைய முறுக்கு 3 நாட்கள் முடிவில் தமிழகம் முழுவதும் ரூ. 7 கோடிகளுக்கு மேல் வசூல்  செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டை வைத்து பார்க்கையில் பிரமாண்ட வசூலாக கருதப்படுகிறது. வரும் வாரம் வரை ‘ஹவுஸ்புல்லாக டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது’ என்று தியேட்டர் மேலாளர் ஒருவர் கூறியுள்ளார்.