செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (18:35 IST)

கிராண்ட் ஃபினாலேவுக்கு அழைப்பு இல்லை: ஆரியின் வருத்தம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நாளை பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் இதற்கு முந்திய சீசனில் கலந்துகொள்ள போட்டியாளர்கள், டைட்டில் வின்னர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்
 
குறிப்பாக சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததாகவும் ஆனால் தனக்கு அழைப்பு இல்லை என்றும் பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
 
ஆரியை பிக் பாஸ் நிர்வாகம் ஏன் அழைக்கவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள இதுகுறித்து விஜய் டிவி நிர்வாகம் தகுந்த விளக்கமளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.