மால் ஓனரின் மகனா ஆஜித்? பரவும் வதந்தியால் பரபரப்பு!

மால் ஓனரின் மகனா ஆஜித்? பரவும் வதந்தியால் பரபரப்பு!
siva| Last Modified செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:15 IST)
மால் ஓனரின் மகனா ஆஜித்? பரவும் வதந்தியால் பரபரப்பு!
பிக்பாஸ் தமிழ் போட்டியாளர்களில் ஒருவரான ஆஜித் தான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் என்றும் மிகவும் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் குடும்பத்தினர் சேர்ந்தவர் என்றும் கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் கூறினார் என்பது தெரிந்ததே
ஆனால் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஆஜித் மால் ஓனரின் மகன் என்றும் அவர் ஏழை போல் நடிப்பதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் வெற்றி பெறுவதற்கும் அவரது பெற்றோர்கள் கொடுத்த மிகப் பெரிய தொகை தான் காரணம் என்றும் கதை கட்டி விட்டனர்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆஜித் குறித்து அவர் கூறிய அனைத்துமே உண்மைதான் என்றும் அவருடைய தந்தை ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தான் என்றும் மால் ஓனரின் மகன் என்பது பொய்யான தகவல் என்றும் தெரியவந்து உள்ளது. எனவே ஆஜித் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் அவரது ஆர்மியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :