வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (09:42 IST)

மீண்டும் ஹீரோவாக கருணாஸ்: டைட்டில் அறிவிப்பு!

நகைச்சுவை நடிகர் கருணாஸ் ஏற்கனவே ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் 
 
இந்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கருணாஸ் நடிக்கும் திரைப்படத்தை திருநாள் என்ற திரைப்படத்தை இயக்கிய ராம்நாத் பழனி குமார் என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த திரைப்படத்தில் அருண்பாண்டியன் மனிஷா யாதவ் ரித்திவிகா திலீபன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவாஇசை அமைக்கிறார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவும், ஜான் பிரிட்டோ படத்தொகுப்பும் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ’ஆதார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் கருணாஸ் போட்டியிடவில்லை என்பதால் அரசியலிலிருந்து தற்போது அவர் விலகி உள்ளதால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் என்பது தெரிந்தது