புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 5 டிசம்பர் 2018 (14:41 IST)

ஏ.ஆர் முருகதாஸுக்கு வந்த சோதனை : உதவி இயக்குநர் போலீஸில் புகார்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது சர்கார் படம். இந்தப் படத்தின்  கதையில் இருந்து படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடுவது வரைக்கும் சர்ச்சைகளுக்கு குறைச்சல் இல்லாமல் இருந்து ஆளும் அதிமுக அரசின் எதிர்ப்பை சம்பாரித்துக் கொண்டது.
இந்நிலையில் தற்போது உதவி இயக்குனர்  அன்பு ராஜசேகர் எனபவர் இன்று வளசாவாக்கம் காவல் நிலையத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும் படி புகார் மனு அளித்திருக்கிறார்.
 
அவர் அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
 
நான் இயக்கிய தாகபூமி குறும்படத்தை திருடி கத்தி திரைப்படமாக எடுத்த திரு ஏ.ஆர். முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் காவல் உதவி ஆணையர் , அன்பு ராஜசேகர் அளித்த புகாரை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.