செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:16 IST)

ரஜினி - ஏ ஆர் முருகதாஸ் படத்தில் இருந்து விலகிய சன்பிக்சர்ஸ்

ரஜினி ஏ ஆர் முருகதாஸ் இணையும் அடுத்த படத்தினை தயாரிப்பதாக இருந்த சன்பிக்சர்ஸ் இப்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாகத் தகவல்கள் பரவிவருகின்றன.

ரஜினியின் 2.0 படம் ரிலிஸாகி விட்டது.அடுத்தப் படமான பேட்ட படமும் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக பேட்டக் குழுவினரும் தயாராகி விட்டனர். அனிருத் இசையில் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருக்கிறது. ஆடியோ வெளியீட்டு விழா வரும் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ரஜினியின் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்தான் என்பது 90 சதவீதம் முடிவாகி விட்டது. படத்தை தயாரிப்பதாக சான்பிக்சர்ஸ் நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அதில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலகி உள்ளது. சர்கார் விவகாரத்தில் சன் பிக்சர்ஸுக்கும் ஏ ஆர் முருகதாஸுக்கும் ஏற்பட்ட மனக்க்சப்பே இந்த முடிவுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 2.0 படம் எதிர்பாராத அளவிற்கு வசூல் செய்யாது என நினைக்கும் லைகா நிறுவனம் ரஜினியிடம்  அடுத்து ஒரு படம் தங்களுக்கு நடித்துக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் அதற்கு ரஜினியும் ஒத்துக் கொண்டுள்ளதாகவும் மார்ச் மாதத்தில் இந்த படம் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி நடிக்கும் கடைசிப் படம் ரஜினி- ஏ ஆர் முருகதாஸ்- லைகா படமாகத்தான் இருக்கும் எனவும் அதன்பின் ரஜினி தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.