செவ்வாய், 25 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (13:57 IST)

விஜய்யின் அந்த பட பாடலுக்காக நான் ட்ரோல் செய்யப்பட்டேன்… ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த தகவல்!

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாவதை அடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக மணிரத்னம் மற்றும் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்ய சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டா ரஹ்மான். அதில் “சர்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன் பாடலுக்காக நான் ட்ரோல் செய்யப்பட்டேன். ஏனென்றால் என்னிடம் இருந்து வேறு எதையோ ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.