செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:54 IST)

ஓவியா மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்: என்ன காரணம்?

நடிகை ஓவியா மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை ஓவியா ஓவியா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் நெட்டிசன்கள் இடையே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi ஹேஷ்டேக் பதிவு செய்த ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் அணி போலீசில் புகார் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இந்த புகார் கிடப்பில் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.