1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (15:25 IST)

ஒரு நள்ளிரவில் நடக்கும் திகில் நிறைந்த திரைப்படம் "ஹெச்.எம்.எம்"

பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தயாரிக்கும் 
"ஹெச்.எம்.எம்" திரைப்படம்
 
இத்திரைப்படத்தில் நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் போன்ற நட்சத்திரங்கள் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.   
      
அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில் ஓர் இரவில்  தொடர்ந்து மூன்று கொலைகள் அரங்கேறுகிறது.
 
முகமூடி அணிந்த உருவம்.ஏன் அந்த கொலைகள்...?
அந்த முகமூடி மனிதன் யார் ? அவனின் இந்த
கொடூர  கொலைகளுக்கு பின்னால் இருக்கும் கதை என்ன..?
என்பதை மிகவும் விறுவிறுப்பாக
நள்ளிரவின் பின்னணியில் திடுக்கிடும் சம்பவங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடனும் பாடல்களே இல்லாமல் முழுக்க முழுக்க   நள்ளிரவு காட்சிகளாகவே படமாக்கப்பட்டுள்ளது
 
படத்தின் கதை எழுதி   தயாரித்து  இயக்கியுள்ளார்  நரசிம்மன் பக்கிரிசாமி.
 
விரைவில் திரைக்கு வரவிருக்கும் "ஹெச்.எம்.எம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.