வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (12:10 IST)

சட்ட விரோதமாக இணையதளங்களில் ’லியோ’ திரைப்படம்: ஹைகோர்ட் முக்கிய உத்தரவு..!

லியோ படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள லியோ திரைப்படம் நாளை 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது 
 
தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை கோரி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், லியோ படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran