சென்னை ரோகிணியில் ‘லியோ’ திரையிடப்படவில்லை: விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு..!
சென்னை ரோகினி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படுவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்று ரோகிணி என்பதும் இங்கு உள்ள 6 ஸ்கிரீன்களிலும் லியோ திரைப்படம் திரையிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் லியோ திரைப்படம் தங்கள் திரையரங்கங்களில் திரையிடப்படவில்லை என்றும் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.
லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் இடையே வசூலில் ஷேர் பிரிவித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படம் திரையிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் பேச்சு வார்த்தை நடந்து நாளை லியோ திரையிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Edited by Siva