வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:55 IST)

இலக்க குறி பார்த்தபடி துப்பாக்கியுடன் அஜித்! வைரல் புகைப்படம் உள்ளே

தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


 
இதனால் உற்சாகத்தில் உள்ள அஜித், தனது அடுத்த படமான பிங்க் ரீமேக்கை வரும் மே மாதத்துக்குள் கொண்டுவர விரும்புகிறார். அவரது பிறந்த நாளான மே1ம் தேதி பிங்க் ரீமேக்கை ரிலீஸ் செய்யும் முனைப்பில் இயக்குனர் வினோத் மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.
 
தற்போது ஓய்வில் இருக்கும் அஜித், கையில் துப்பாக்கியுடன் இலக்கை குறி பார்த்து சுடுவதற்காக பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைராகி வருகிறது. அந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள்.