வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (09:35 IST)

ராம்சரண் - உபாசா தம்பதிக்கு பெண் குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து.!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான ராம்சரண் தேஜா மனைவி உபாசனாவிற்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளதை  அடுத்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
பிரபல நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவிற்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 
 
இந்த நிலையில் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து ராம் சரண்யா உபாசனா தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. உபாசனின் தாத்தாவின் அப்பல்லோ மருத்துவமனையில் குழந்தை பிறந்திருப்பதாகவும் குழந்தை மற்றும் தாய் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ராம் சரண் தேஜா உபாசனா தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva