திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 4 நவம்பர் 2020 (14:06 IST)

காமெடி நடிகர் சதீஷுக்கு பெண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

தளபதி விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்து வரும் நடிகர் சதீஷுக்கும் சிந்து என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிந்து கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார்.
 
இந்த நிலையில் இன்று சதீஷ், சிந்து தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இதுகுறித்து சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாகவும், ரசிகர்களின் வாழ்த்தை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து சதீஷின் குழந்தைக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.