1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (13:58 IST)

முரளிதரனின் 800 படத்தின் டிரைலரை வெளியிடும் சச்சின்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக்
‘800’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இந்த படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முரளிதரனின் இலங்கைப் போர் தொடர்பான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி, அந்த படத்தில் இருந்து விலகினார்.

அதையடுத்து தற்போது ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் இந்த படத்தில் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்து முடிந்தது. படத்தில் முக்கிய வேடத்தில் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள் தாஸ் ஆகியோர் நடிக்க இயக்குனர் ஸ்ரீபதி இயக்கியுள்ளார்.  ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.  சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்நிலையில் நாளை இந்த படத்தின் டிரைலர் நாளை ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட உள்ளார். நாளை பிற்பகல் 2.45 மணிக்கு இந்த டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.