திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (12:04 IST)

வெங்கட் பிரபு படத்தில் ஆறு சென்ஷேஷ்னல் எடிட்டர்ஸ்!

தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் வகையில் திரைக்கதையில் ட்விஸ்ட் வைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் என்பதையும்  தாண்டி பாடகராகவும், தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார். 
 
டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், வெங்கட் பிரபு தயாரிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு "கசடதபற" என டைட்டில் வைத்துள்ளனர். இதனை நடிகர் சூர்யா சமீபத்தில் தனது ட்விட்டரில் அறிவித்திருந்தார். 


 
கசடதபற திரைப்படம் வித்யாசமான ஆறு கதைகளைக்கொண்டு ஆன்தாலஜி படமாக உருவாகியுள்ளது. எல்லாக் கதைகளும் ஒன்றுக்குக்கொன்று சம்மந்தப்படுத்தி திரைக்கதையாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி நடிகர்கள், கேமராமேன்கள், எடிட்டர்கள், மியூசிக் டைரக்டர்கள் என ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்ஸ்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  


 
அந்த வகையில் தற்போது இந்த படத்தில் ஆன்டனி,பிரவீன்.கே.எல் ,ரூபன்,காசி விஸ்வநாதன்,ராஜா முஹமது,விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட திறமைவாய்ந்த ஆறு முன்னணி எடிட்டர்கள் பணியாற்றுகிறார்கள்.