வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:20 IST)

விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை: என்னென்ன ஆவணங்கள் சிக்கின?

விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தை அடுத்து விஜய் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்
 
விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பண்ணை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாகவும் விஜய்யிடமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் வீட்டில் வருமான துறை அதிகாரிகள் நேற்று இரவு விடிய விடிய சோதனை செய்ததாகவும், இந்த சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது
 
சமீபத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூல் செய்ததாக அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் பதிவு செய்ததுதான் இந்த சோதனைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் சாலிகிராமம் வீடு மற்றும் நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் விஜய் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் போலீசார் தகுந்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று இரவு 8.45 மணிக்கு பனையூரில் விஜய் வீட்டில் சோதனை செய்ய ஆரம்பித்த அதிகாரிகள் விடிய விடிய சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சோதனை முடியும் வரை விஜய் வீட்டின் முன்பாக ஆயுதமேந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது