செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

முழு உலகக்கோப்பை தொடரும் இந்தியாவில்… தொடங்கும் தேதி இதுவா?

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முறையாக அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என தகவல்கள் பரவி வருகின்றன. இறுதிப் போட்டி குஜராத்தின் அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் வெல்லாமல் போனால் அது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும். அதனால் பிசிசிஐ இப்போதே உலகக்கோப்பைக்கான அணியை தயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.