1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஜூலை 2020 (12:13 IST)

நான்கே நாளில் நடிகை பெயரில் 50 போலி அக்கவுண்ட்கள் – ஒரே ஒரு டிரெய்லரில் இவ்ளோ ரசிகர்களா?

ராம்கோபால் வர்மா இயக்கி வரும் திரில்லர் படத்தில் நடித்துள்ள கதாநாயகி அப்சரா ராணியின் பெயரில் 50 க்கும் மேற்பட்ட போலி அக்கவுண்ட்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ராம்கோபால் வர்மா இப்போது த்ரில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளன. அந்த அளவுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள அப்சரா ராணி கவர்ச்சியாக நடித்துள்ளார். அதனால் அவர் பெயரில் தற்போது 50 க்கும் மேற்பட்ட போலி சமூகவலைதள கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது சம்மந்தமாக அவரே ஸ்க்ரீன்ஷாட்களைப் பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த அக்கவுண்ட்கள் படத்துக்கான பப்ளிசிட்டியாகவும் அமைந்துள்ளன.