புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (11:04 IST)

மார்ச் 8ம்தேதி சத்ரு, பூம்ராங் உள்பட 5 படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது இப்போது சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. வாரம் வாரம் வெள்ளிக்கிழமை திரையுலகினருக்கு கொண்டாட்ட நாளாக மாறிவிட்டது.



அதிகப்படியான படங்கள் எடுக்கப்படுவதால் ஒவ்வொரு வாரமும் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகவேண்டிய கட்டாயம் தமிழ் சினிமாவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. நட்சத்திர நடிகர்களின் படங்கள் இல்லாத சமயங்களில் இந்த மாதிரி அதிகப்படியான படங்கள் ரிலீசாவது இயல்பாக நடக்கிறது.  இதனால் தியேட்டர்கள் கிடைப்பது சிறிய படங்களுக்கு குதிரைக் கொம்பாக உள்ளது. கிடைக்கும் கொஞ்ச தியேட்டர்களில் படங்களை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டுமென்று ஒரே நேரத்தில் அதிகப்படியான படங்களை ரிலீஸ் செய்கின்றனர் சிறு பட தயாரிப்பாளர்கள்.
 
இந்நிலையில் வரும் மார்ச் 8 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் ஆக உள்ளன. 
 
அதில் முக்கியமான கவனிக்கத்தக்க படங்கள் என்றால் பூமராங் மற்றும் சத்ரு. பூம்ராங் படத்தில் மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வா மற்றும் எல்கேஜி நாயகன் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 
சத்ரு படத்தில் பரியேறும் பெருமாள் புகழ் கதிர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார் .
 
இந்த இரண்டு படங்களைத் தவிர  பரத்தின் பொட்டு, கபிலவஸ்து, ஸ்பாட் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.