ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2023 (14:16 IST)

விக்ராந்த் யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் வேலுமணி!

விக்ராந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய படத்தை முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடங்கி வைத்துள்ளார். இந்த படத்தை ‘தா’, ‘வில் அம்பு’ போன்ற படங்களை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இயக்க உள்ளார். இந்த படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் பவித்ரா மாரிமுத்து, இனிகோ பிரபாகர், மிப்புசாமி, குமார் நடராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிக்பேங்க் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, கே கே ஒளிப்பதிவு செய்ய, பாலமுரளி பாலு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. படம் பற்றி பேசிய இயக்குமர் ரமேஷ் சுப்ரமண்யம் “இந்த படம் 1950 களில் நடக்கும் ஒரு சைக்கலாஜிக்கல் கதைக்களம். படத்துக்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒரு பிரம்மாண்ட பங்களா செட்டை உருவாக்கியுள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக வெற்றிப் படத்துக்காக காத்திருக்கும் நடிகர் விக்ராந்துக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.