செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:43 IST)

49வது கோவா சர்வதேச திரைப்பட விழா: இன்று தொடக்கம்!

கோவா, பான்ஜி நகரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில், 49வது சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை தொடங்குகிறது.
 
இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சக மும், கோவா மாநில அரசும் இணைந்து நடத்தும், 49வது சர்வதேச திரைப்பட விழா இன்று கோலகலமாக தொடங்குகிறது. 
 
கோவா தலைநகர் பான்ஜி நகரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி உள்விளையாட்டு அரங்கில், இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார். 
 
வருகிற 28ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 212 படங்கள் திரையிடப்படுகிறது. 
 
இதில் சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் 15 படங்களும், சிறந்த இந்திய படங்கள் பிரிவில் 22 படங்களும் போட்டியிடுகிறது. 
 
இதில் தமிழ் திரையுலகில் இருந்து பரியேறும் பெருமாள், பேரன்பு, டூலெட் மற்றும் பாரம் ஆகிய நான்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
 
மேலும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பராசக்தி மற்றும் மாம் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.