இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி: 45 வருட கொண்டாட்டம்!
இளையராஜாவின் முதல் படம் அன்னக்கிளி: 45 வருட கொண்டாட்டம்!
இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அன்னக்கிளி திரைப்படம் வெளியாகி 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து அதன் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
கடந்த 1976 ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி அன்னக்கிளி திரைப்படம் ரிலீஸ் ஆனது. சிவகுமார் சுஜாதா நடிப்பில் தேவராஜ் மோகன் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் திரைக்கதையில் உருவான திரைப்படம்தான் அண்ணகிளி. 200 நாட்கள் ஓடிய இந்த படத்தில்தான் இசைஞானி இளையராஜா முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்
இந்த படத்தில் இடம்பெற்ற அன்னக்கிளியே உன்னை தேடுது, மச்சான பாத்தீங்களா, சொந்தமில்லை பந்தமில்லை, அடி ராக்காயி மூக்காயி போன்ற பாடல்கள் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. இந்த நிலையில் அன்னக்கிளி திரைப்படம் ரிலீஸ் ஆகி 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து இசைஞானியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்