திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2017 (06:50 IST)

ஒரு நடிகையை காப்பி அடித்து நான்கு நடிகைகள்: எங்கு போய் முடியுமோ?

பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடித்த 'குவீன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.12.5 கோடிதான். ஆனால் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து விநியோகஸ்தர்களுக்கு பணமழையை கொட்டியது.



 
 
இதனால்தான் இந்த படம் தற்போது நான்கு தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் காஜல் அகர்வாலும், தெலுங்கில் தமன்னாவும், மலையாலத்தில் மஞ்சிமாமோகனும், கன்னடத்தில் பாரூல் யாதவ்வும் கங்கனா வேடத்தில் நடிக்கவுள்ளனர்.
 
இந்த நிலையில் தற்போது இந்த நான்கு நடிகைகளுக்கும் இடையே போட்டோ போட்டியாம். யார் நடிக்கும் ரீமேக் படம் அதிக வெற்றி பெறும் என்பதுதான். எனவே கங்கனாவின் நடிப்பை அப்படியே வெளிப்படுத்த நால்வரும் போட்டி போட்டுக்கொண்டு இந்த படத்தை பலமுறை பார்த்துவருவதாக கூறப்படுகிறது. படம் வெளிவந்த பின்னர் தான் இந்த நால்வரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை கூற முடியும்