செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (23:41 IST)

காஜல் அகர்வால், தமன்னாவுக்கு இணையாக சிம்பு நாயகி

பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற குவீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'பாரீஸ் பாரீஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் கூட்டம் சமீபத்தில் நடந்தபோது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்கவிருப்பதும் உறுதி செய்யப்பட்டது, இந்த படத்தின் போட்டோஷூட்டையும் தமன்னா வெற்றிகரமாக முடித்துவிட்டு விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
 
இந்த நிலையில் இதே படத்தின் மலையாள ரீமேக்கில் நடிக்க மஞ்சிமாமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடைமையடா' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
 
குவீன் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.