1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (18:35 IST)

அஜித் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு...ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்க ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பரிந்துரையில், கடந்த 1990 ஆம் ஆண்டு என் வீட்டு என் கணவர் என்ற படத்தின் மூலம் பள்ளி மாணவனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார் அஜித்குமார். அசோகா படத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்துள்ளார் அஜித், 'ஒரு வளர்ந்து வரும்  நடிகர் அஜித்குமார் வில்லனாக நடித்ததை ஷாருக்கான் பாராட்டியது' குறிப்பிடத்தக்கது.

இதன்பின், 1993 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற படத்தில், அஜித்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், ஒரு சில விளம்பர படங்களிலும் அஜித்குமார் நடித்திருந்தார்.

அதன்பின்னர், 1993 ஆம் ஆண்டு, அமராவதி என்ற படத்தில் செல்வா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து, பாச மலர்கள், விஜய்யுடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே, பவித்ரா, ஆசை, பிரஷாந்துடன் இணைந்து ‘’கல்லூரி வாசல்’’ உள்ளிட்ட பல படங்களின் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

அதன்பின்னர், சரணின் இயக்கத்தில் அட்டகாசம், அமர்க்களம், முருகதாஸின் தினா போன்ற படங்கள் அஜித்தை அல்டிமேட் ஸ்டாராக உயர்த்தியது.
முகவரி, சிட்டிசன், கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன் போன்ற படங்களில் சிறந்த கேரக்டரில் நடித்து ரசிகரளின் அபிமானத்தைப் பெற்றார். கே.எஸ்.ரவிக்குமாரின் வில்லன், காட்பாதர், பில்லா உள்ளிட்ட படங்களில் அஜித்தின் நடிப்புத்திறன் அடையாளம் காணப்பட்டது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை, போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்தன.

தமிழக அரசின் விருதுகளும் பலமுறை பெற்றுள்ள அஜித்குமார், சினிமா மட்டுமின்றி, புகைப்படம், பைக்ரேஸ், துப்பாக்கிசுடுதல்( சமீபத்தில் திருச்சியில் நடந்த போட்டியில் தங்கப் பதக்கங்கள் வென்றார்). ட்ரோன் போன்றவற்றில் அதிக ஆர்வமுள்ளவர்.

தற்போது, அவர் வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் 3 வது முறையாக அஜித்61 படத்தில் நடித்து வருகிறார். அஜித்62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
.
 நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஜித்திற்கு ஒரு பெண் ஒரு மகன் என இரு பிள்ளைகள் உள்ளனர். தான் உண்டு தன் வேலை உண்டு என்பதில் ஆர்வமாக உள்ள  அஜித்குமார் 
சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடியும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.