ஆரம்பமே சரியில்லையே! பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர்கள் மனு தள்ளுபடி

Last Modified செவ்வாய், 11 ஜூன் 2019 (22:45 IST)
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணியை எதிர்த்து முதல்முறையாக களமிறங்கியுள்ள பாக்யராஜ் அணி, எந்தவித திட்டமிடலும் இன்றி திடீரென தேர்தலை சந்தித்தது போல் தெரிகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வில் கடைசி வரை குழம்பிய இந்த அணி, பின்னர் ஒருவழியாக வேட்புமனு தாக்கல் முடியும் நாளில் வேட்பாளர்களை அறிவித்து அவசர அவசரமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் பாக்யராஜ் அணியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்த ரமேஷ் கண்ணா, விமல் மற்றும் ஆர்த்தி கணேஷ் ஆகிய மூவரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் மூவரும் முறையாக நடிகர் சங்கத்திற்கு சந்தா கட்டாததால் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
ஆனால் தான் 40 வருடங்களுக்கும் மேலாக நடிகர் சங்கத்தில் இருப்பதாகவும், சந்தாவையும் சரியாக கட்டியுள்ளதாகவும் நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :