ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (07:49 IST)

மணிரத்னம் இயக்கும் மல்டி ஸ்டார் படத்தில் நடிக்க மறுத்த விஜய்

'காற்று வெளியிடை' படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்கவுள்ளது. சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் உள்ளது.
 


 


இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு மணிரத்னம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டர் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது
 
ஆனால் இந்த தகவலை விஜய் தேவரகொண்டா மறுத்துள்ளார்.மணிரத்னம் இயக்கும் படம் ஒன்றில் விரைவில் நடிக்கவிருப்பதாகவும், ஆனால் அது இந்த மல்டி ஸ்டார் படம் இல்லை என்றும் அவரது தரப்பினர் கூறியுள்ளனர்.