வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (07:36 IST)

ராகவா லாரன்ஸின் ட்ரஸ்ட்டில் 20 பேருக்குக் கொரோனா- அதிர்ச்சி தகவல்!

சென்னையில் உள்ள ராகவா லாரன்ஸின் ட்ரஸ்ட்டில் 20 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அதிக நிதியுதவி அளித்த தமிழ் நடிகராக ராகவா லாரன்ஸ் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் சார்பாக பல சமுதாய தொண்டுகளையும் ஆதரவற்றவர்களுக்கு இல்லங்களையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள அவரது டிர்ஸ்ட்டில் இருக்கும் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த ட்ரஸ்ட்டில் இருக்கும் 15 மாணவ மாணவிகளுக்கும், 3 பணியாளர்களுக்கும் 2 சமையல் காரர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.