செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 மே 2020 (07:23 IST)

சென்னை உள்பட 6 மாவட்டத்திற்கு திடீர் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்பட 6 மாவட்டத்திற்கு திடீர் எச்சரிக்கை
சென்னை உள்பட 6 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும் என்றும் இந்த 6 மாவட்டங்களிலும் இன்று வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் அதனால் பொதுமக்கள் அவசிய தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டு கொண்டுள்ளது. 
 
குறிப்பாக காலை 11.20 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை, இந்த 6 மாவட்ட பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதேபோன்ற அனல்காற்று தொடர்பாக எச்சரிக்கை வட மாநிலங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது 
 
இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரை ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது