புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (14:11 IST)

இப்படி படம் எடுத்தா பாரின்ல மட்டுமில்ல... பாகிஸ்தான்லயும் சூப்பராத்தாம் போகும்! வேறலெவல் '2.o'

ரஜினி காந்த் , அக்‌ஷய்குமார் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகியுள்ள  2.o படம் வசூலில் பெரும் சாதனை படைத்து உள்ளது.

படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான். 
 
இப்போது செய்தி என்னவென்றால், பாகிஸ்தானில் 2.0 திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அந்நாட்டு ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதால் திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் 25 திரையரங்கில் வெளியான் 2.o திரைப்படம் 75 திரையரங்குகளில் தற்போது படம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டே நாளில் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் 12 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

2.0 திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் வார முடிவில் 300 கோடி ரூபாய் வசூலை 2.0 திரைப்படம் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 550  கோடி ரூபாய் வசூலை தாண்டினால் லாப கணக்கை முதல் போட்ட லைகா நிறுவனம் பார்க்க முடியும்.