தமிழின் முன்னணி 15 யுடியூப் சேனல்கள் முடக்கம்! விளையாடிய ஹேக்கர்கள்!
தமிழில் முன்னணி யுடியுப் சேனல்களாக இருக்கும் பரிதாபங்கள் உள்ளிட்ட 15 சேனல்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கப் பட்டுள்ளன.
பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ், சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ் போன்ற சேனல்கள் இன்று ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டு அந்த சேனல்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட சேனல்கள் அனைத்தும் ஒரே MCN இல் இயங்கியவை என்று சொல்லப்படுகிறது.