செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (22:30 IST)

'மெர்சல்' டீசர் செய்த மேலும் ஒரு சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் டீசர் யூடியூப் வரலாற்றில் அதிவேக லைக்ஸ்கள், அதிகபட்ச லைக்ஸ்கள் ஆகிய சாதனை பெற்றுள்ளதோடு, 24 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று அசைக்க முடியாத சாதனைகளை கைவசம் வைத்துள்ளது



 
 
இந்த நிலையில் தற்போது இந்த டீசரால் இன்னொரு சாதனை கிடைத்துள்ளது. அதாவது டுவிட்டரில் #mersalteaser என்ற ஹேஷ்டேக்கில் ஒரு மில்லியன் டுவீட் பதிவாகியுள்ளது. அதே 24 மணி நேரத்தில் ஒரு ஹேஷ்டேக்கில் இவ்வளவு அதிகமான டுவீட்டுக்கள் பதிவாகியுள்ளதும் ஒரு சாதனைதான்
 
அதுமட்டுமின்றி இந்த 2017ஆம் ஆண்டில் விஜய் படம் குறித்த ஹேஷ்டேக்குகள் ஒரு மில்லியன் டுவீட் பெறுவது இது முதல் முறை அல்ல என்பதும் இது நான்காவது முறை என்பதும் இன்னொரு சாதனை
 
இப்படி சாதனை மேல் சாதனை மெர்சல் செய்து வரும் நிலையில் எதிரிகளுக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.