திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (16:51 IST)

மு.க. ஸ்டாலினை கொச்சைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - துரைமுருகன்

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் போய் தற்போது  ஊரில் பார்க்கும்  சுவரெங்கும் சினிமா மற்றும் அரசியல் தொடர்பான போஸ்டர் ஒட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது .

இந்நிலையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான  ஸ்டாலினைக் குறித்து தவறான முறையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  கடும்ம் எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கோவையில் ஸ்டாலினையும் எடப்பாடி பழனிசமியையும் ஒட்டுப்பிட்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவினர் வேண்டுமென்றே போஸ்டர் ஒட்டுகின்றனர். அதில்,  திமுகதலைவர்கள் பேசாததைப் பேசியதாகத் திரித்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்.

மேலும் கோவைப் பகுதிகளில் திமுகவினர் மீதும் ஸ்டாலின் மீது கொச்சைப் படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது திமுகவினர் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.