வியாழன், 11 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (11:01 IST)

இதுதான் கிளைமேக்ஸ் காட்சி –லோகேஷ் சொன்ன ரகசியம் !

இதுதான் கிளைமேக்ஸ் காட்சி –லோகேஷ் சொன்ன ரகசியம் !
மாஸ்டர் படத்தின் முதல் மூன்று லுக் போஸ்டர்களைப் பற்றிய சீக்ரெட்டைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்காக வெளியிடப்பட்ட மூன்று போஸ்டர்களைப் பற்றிய ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

அவர் ‘படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹீரோவின் அறிமுகக் காட்சி ; இரண்டாவது போஸ்டர் படத்தின் இடைவேளைக் காட்சி; மூன்றாவது போஸ்டர் கிளைமாக்ஸ் காட்சி’ எனத் தெரிவித்துள்ளார். படத்தின் முதல் லுக் போஸ்டராக விஜய் கோபமாக அமர்ந்திருப்பது போன்ற பிளர் செய்யப்பட்ட போஸ்டர் வெளியானது. அதன் பின் குழந்தைகளுக்கு நடுவில் விஜய் வாயில் கை வைத்து சைலண்ட் என சொல்லும் போஸ்டர் வெளியானது. அதன் பின்னர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் மோதிக்கொள்ளும் விதமாக ஆக்ரோஷமான போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.