ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (15:19 IST)

தேர்தலால் இந்தியன் 2 தள்ளிவைப்பு – அதிருப்தியில் ஷங்கர் !

மக்களவைத் தேர்தல் வர இருப்பதால் கமல் இந்தியன் 2 படத்திற்கான ஷூட்டிங்கை தேர்தலுக்குப் பின் வைத்துக்கொள்ளலாம் என சொல்லிவிட்டதால் படக்குழு அதிருப்தியில் உள்ளது.

இந்தியன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேலானாலும்ம் 2.0 பட ரிலீஸ் தாமதம், கமலின் அரசியல் பணிகள் போன்றவற்றால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. கடைசியாக ஒரு வழியாக ஜனவரி 18 அன்று இந்தியன் 2 படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக உருவானது.

ஆனால் ஆரம்பித்து சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்குக் காரணம் கமலின் இந்தியன் தாத்தா மேக் அப்பில் இயக்குனர் ஷங்கர் திருப்தி அடையவில்லையாம். எனவே மேக் அப் விஷயங்கள் தொடர்பாக வேறு சில முயற்சிகள் செய்யப்பட்டன. அதற்கிடையில் இருந்த இடைவெளியில் கமல் தனது அரசியல் பணிகளில் கவனம் செலுத்தினார்.

ஆனால் அதன் பிறகு தொடங்கிய படப்பிடிப்பு சில நாட்களிலேயே முடிந்தது. அதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாலும் கமல் தேர்தலில் போட்டியிட இருப்பதாலும் இப்போது படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

அதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு தேர்தலுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர்.