Daily Horoscope
✕

ரவா லட்டு செய்ய...!

Updated: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (16:26 IST)
சர்க்கரை - ½ கிலோ
நெய் - 6 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 50 கிராம்
தேங்காய் - 1
ஏலக்காய் - 12
பால் - 250 மில்லி லிட்டர் 
செய்முறை:
 
முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக (முழு முந்திரி பருப்பை நான்காக) உடைத்து நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
 
வாணலியில் நான்கு ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுக்கவும். அடுத்ததாக சர்க்கரையை அதனோடு சேர்த்துக் கிண்டவும். தொடர்ந்து சிம்மில் வைத்தே செய்யவும். ஓரளவு சர்க்கரையின் அளவு சிறுத்து ரவையோடு சேர்ந்து வரும்போது தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிண்டவும். ஓரளவிற்கு விடாமல்  கிண்டவும். இல்லை எனில் அடியில் தீய்ந்து ஒட்டிக் கொள்ளும்
 
பின்னர் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து ஒன்றாக கலந்து வரும்படி கிளறவும். கடைசியாக 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அதனோடு வறுத்த முந்திரி பருப்பைச் சேர்க்கவும். சூடான ரவைக் கலவையில் மிதமான சூட்டில் உள்ள பாலை ஊற்றி ஒரு பகுதியை மட்டும் நன்கு கலந்து விட்டு லட்டு பிடிக்கலாம். சுவையான  ரவா லட்டு தயார்.

எல்லாம் காட்டு

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

அடுத்த கட்டுரையில்
Show comments