வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

தீபாவளி: சுவை மிகுந்த மாலாடு செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பொட்டுக்கடலை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பாதாம் - 8
முந்திரி - 8
பிஸ்தா - 8
ஏலக்காய் - 3
நெய் - 2 கரண்டிகளுக்கு  அதிகம்.

செய்முறை:
 
பொட்டுக்கடலை  லேசாக வறுத்து மிக்ஸியில்  நன்றாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளையும்  லேசாக வறுத்து  மிக்ஸியில் கரகரப்பாகப்  பொடிக்கவும். ஏலக்காயுடன்  சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
 
பொட்டுக்கடலை மாவு, மற்றும்  முந்திரி, பாதாம், சர்க்கரைப் பொடி  எல்லாவற்றையும்  ஒரு  அகன்ற தாம்பாளத்திலோ  தட்டிலோ   சேர்த்துக்  கலக்கவும். இனிப்பு  குறைவாக  வேண்டியவர்கள்   சர்க்கரைப் பொடியைக் குறைக்கவும்.
 
வாணலியில்  பாதியளவு  நெய்யை விட்டு  மிதமான  தீயில் நன்றாகச் சூடாக்கவும். தாம்பாளத்தில்  கலவையை பாதியாக  பிரித்துக் கொள்ளவும். பாதிக் கலவையில்  நன்றாகக்  காய்ச்சிய  நெய்யைவிட்டு அகலமான  கரண்டியினால் நன்றாகக்  கலக்கவும்.
 
சூடான நெய்யுடன் நெய்யின் சூட்டில்  சர்க்கரை இளகி  உருண்டை பிடிக்க முடியும். சற்று சூடாகவே  இருக்கும் போது  லட்டைப் பிடிக்கவும். ஏலக்காய் மணத்துடன்  முந்திரி பாதாம்  ருசியுடன் சுவையான் மாலாடு தயார்.