வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (09:30 IST)

செம டேஸ்ட்டான குல்கந்து ஜாமூன் செய்வது எப்படி? – Diwali Special Recipe!

Gulkand Gulab Jamun
தீபாவளி என்றாலே இனிப்பு வகைகளில் குலோப் ஜாமூன் செய்வது பலருக்கும் வழக்கம். ஆனால் குலோம் ஜாமூன் செய்யும் விதத்திலேயே சூப்பரான குல்கந்து ஜாமூனும் செய்யலாம். அது எப்படி என பார்ப்போம்..



தேவையான பொருட்கள்: பிரட், குல்கந்து, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய் பொடி, எலுமிச்சை சாறு, நெய், எண்ணெய்.

குல்கந்து ஜாமூனுக்கு முதலில் பாகு தயார் செய்ய வேண்டும். ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்க்க வேண்டும். அது நன்றாக கொதித்ததும் அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, துளியளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலக்க வேண்டும். இப்போது இனிப்பு பாகு தயார்.

பிரட்டை எடுத்து அதில் ப்ரவுன் நிறத்தில் உள்ள ஓரங்களை வெட்டிவிட்டு, பொடியாக்கி பாலுடன் சேர்க்க வேண்டும். அதை நன்றாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் சிறுசிறு ஜாமூன் உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த உருண்டைகளுக்குள் குல்கந்து வைத்து மீண்டும் ஒரு முறை உருட்டிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு அதில் இந்த உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொறித்து எடுத்த உருண்டைகளை தயார் செய்து வைத்துள்ள இனிப்பு பாகில் அரைமணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

இப்போது சுவையான சூப்பரான குல்கந்து ஜாமூன் தயார்.

Edit by Prasanth.K