Daily Horoscope
✕

நெருப்பு வளையத்தில் சூரிய கிரகணம்.. வெறும் கண்களால் பார்க்கலாமா??

Updated: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:44 IST)
வரும் 26 ஆம் தேதி நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சூரியன், பூமி, நிலவு, இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனை நிலவு மறைக்கும். இதுவே சூரிய கிரகணம். வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது. இது நெருப்பு சூரிய கிரகணம் என்னும் அரிய வகை சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

காலை 8 மணியில் இருந்து 3 மணி வரை இந்த சூரிய கிரகணம் தெரியும் எனவும், இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் என்பவர் கூறியுள்ளார். இந்த கிரகணம் கோவை, அவினாசி, ஈரோடு, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 10 இடங்களில் தெளிவாக தெரியும் எனவும், சென்னையில் பகுதி அளவே தெரியும் எனவும் கூறியுள்ளார்.

சூரிய கிரகணத்தை பார்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்த ஏர்டெல்... பயணர்கள்

நூலகத்தை கட்டியது திமுக ஆட்சியில்.. 99.75 % வேலைகள் முடிந்ததும் திமுக ஆட்சியில்.. ஆனால் பழி மட்டும் தவெக ஆட்சியில்...

பிப்ரவரி 14ஆம் தேதி அகல்விளக்கு பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை.. ஆவணத்தை வெளியிட்ட தவெக அரசு வெளியீடு...

பெரியார் அறிவுலகம் நூலகத்தின் பணியை 99.75% நாங்கள் தான் முடித்தோம்: முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம்...

போலி புத்தகங்களில் எழுத்தாளர் பெயர்களில் ‘விஜய்’.. ஒரு எழுத்தாளர் பேரு திரிஷா விஜய்....

அடுத்த கட்டுரையில்
Show comments