1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2016 (14:31 IST)

விமானம் ஏன் வெள்ளையாவே இருக்குனு யாராவது யோசிச்சீங்களா???

தெய்வத்திருமகள் படத்தில் காக்க ஏன் பா கருப்பா இருக்கு? மரம் ஏன் பா உயரமா இருக்கு? என கேட்பது போல இருக்கும் இந்த கேள்வியும். ஆனால் இதற்கு பின் அறிவியல் பூர்வமாண விடையும் உள்ளது.


 
 
நிறங்களிலேயே மங்காத நிறம் வெள்ளை. அதை தவிர்த்து மற்ற அனைத்து நிறங்களும், அதிகமாக வெயில் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு அதிகம் பட்டால் சீக்கிரம் மங்கிவிடும்.
 
அதே போல் மற்ற நிறங்கள் சீக்கிரமாக வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால், அதிகம் சூடாகும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும். இதனால் விமானம் அதிகமாக சூடாகாது.
 
வானில் பறக்கும் போதும், நிலத்திலும் இயல்பாக, எளிதாக பார்க்கக்கூடிய நிலை வெள்ளை நிறத்திற்கு இருக்கிறது. இதனாலும் வெள்ளை நிறம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. 
 
மேலும், விமானங்களுக்கு வெள்ளை நிறம் பயன்படுத்துவதால் மறுவிற்பனை மதிப்பும் அதிகம் பாதிக்காது எனவும் கூறப்படுகிறது.
 
பெரும்பாலான விமானங்கள், விமான கம்பெனிகளால் சொந்தமாக வாங்கப்படுவது இல்லை. விமான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து குத்தகைக்கு தான் வாங்குகின்றனர். வெள்ளை நிறம் பயன்படுத்துவதால், லோகோவை மற்றும் மாற்றினால் போதுமானது எனவும் சிலர் கூறுகின்றனர்.
 
விமானத்தை பொதுவாக பெயின்ட் செய்ய 33 லட்சத்தில் இருந்து ஒரு கோடியே 33 லட்சம் வரை ஆகலாம். வண்ணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான செலவும் அதிகரிக்கும். 
 
இதுபோல பல காரணங்களால் விமானம் வெள்ளை நிறத்திலேயே இயக்கப்படுகிறது.