செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (13:04 IST)

யாஷிகாவிடம் விபத்து குறித்து போலீசார் வாக்குமூலம்

சுயநினைவுடன் இருக்கும் யாஷிகாவிடம் விபத்து குறித்து போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

 
மாமல்லபுரம் அருகே விபத்து நடந்த நிலையில் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்புகளும், கை கால் எலும்புகளும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வந்தது.  அவர் முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும் என்றாலும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார். 
 
மேலும், அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. அதோடு யாஷிகா கார் ஓட்டும்போது மதுபோதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.