ஞாயிறு, 29 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By ஜே,பி,ஆர்
Last Updated : புதன், 12 ஆகஸ்ட் 2015 (09:40 IST)

நான் இனாம் வாங்கக் கூடியவன் இல்லை - டி.ஆர் பேட்டி

நான் இனாம் வாங்கக் கூடியவன் இல்லை - டி.ஆர் பேட்டி
வாலு ஆகஸ்ட் 14 வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார், டி.ஆர். படம் வெளியாவதை அப்போது உறுதி செய்த அவர், படத்தின் தாமதத்திற்கான காரணத்தையும், படம் வெளியாக உதவி செய்தவர்கள் யார் என்பதையும் கூறினார்.


 

 
சிம்புவின் வாலு எப்போது ரிலீஸ்? வழக்குகள் முடிந்துவிட்டனவா?
 
சிம்பு படம் பல்வேறு தடைகளை தாண்டி வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படம் வெளியீடு சம்பந்தமாக மேஜிக் ரேஸ் நிறுவனத்துக்கும், நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் எழுந்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டது. மேலும், இந்த படத்தின் வெளியீட்டுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி கிடைத்துவிட்டது. 
 
எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது?
 
இப்படத்தை தமிழகத்தில் 300-க்கு அதிகமான திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளுக்கு மேலும் வெளியிடவுள்ளோம்.
 
வாலு படம் வெளியாக விஜய் உதவியிருப்பது பற்றி...?
மேலும் அடுத்தப்பக்கம் பார்க்க...

சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சினிமாவில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும், சிம்பு படத்துக்கு பிரச்சினை என்று வந்தபிறகு யாரும் உதவ முன்வரவில்லை.
 
விஜய் தானாக முன்வந்து இப்படம் வெளிவருவதற்கு மிகவும் உதவியாக இருந்தார். அதேபோல், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களிடம் பேசி, இப்படத்தை வெளியாவதற்கு அவர்தான் மிகவும் உறுதுணையாக இருந்தார். 

நான் இனாம் வாங்கக் கூடியவன் இல்லை - டி.ஆர் பேட்டி

 


 
விஜய் உங்கள் ரசிகர் என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
விஜய் வேலாயுதம் படத்தில், எனக்கு டி.டி.ஆர் எல்லாம் தெரியாது. டி.ஆர். மட்டும்தான் தெரியும். நான் அவரோட தீவிர ரசிகர் என்று சொல்வார். உண்மையில் நான்தான் அவருடைய தீவிர ரசிகன். அவருக்கு நான் நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். விஜய் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஏனென்றால், அவர்தான் உண்மையான தமிழன்.
 
வாலு படப் பிரச்சனையை எப்படி தீர்த்தீர்கள்?
 
வாலு படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்பதற்காக சக்ரவர்த்தியின் சொந்தக் கடனையும் நான் ஏற்றுக் கொண்டேன். இன்றைய தேதியில் எனக்கு சம்பந்தமில்லாத 26 கோடி ரூபாய் கடன்களை இந்தப் படம் வெளியாக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
 
விஜய் பண உதவி செய்ததாக கூறுகிறார்களே?
 
அப்படி சிலர் கூறுகிறார்கள். நிச்சயம் அப்படியில்லை. நான் யாரிடமும் இனாம் வாங்கவில்லை. அப்படி வாங்கக் கூடியவன் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். விஜய்யும், பி.டி.செல்வகுமாரும் கோவை சிவகுமாரும் சில விநியோகஸ்தர்களிடம் பேசி வாலு படம் வெளியாக அவர்களை சம்மதிக்க வைத்தனர்.