ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Siva
Last Modified: வெள்ளி, 26 டிசம்பர் 2025 (13:20 IST)

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்.. அவர் திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்கட்டும்: பாஜகவின் வியூகம்

விஜய்யை விமர்சிக்க வேண்டாம்.. அவர் திமுகவின் சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்கட்டும்: பாஜகவின் வியூகம்
தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை, திமுகவிற்கு எதிரான வாக்குகளை பிரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே விஜய்யை தாக்கிப் பேசுவதை விட அவரை விமர்சிக்காமல் அமைதி காப்பதே பாஜக மற்றும் அதிமுகவிற்கு பெரும் லாபத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.
 
ஒருவேளை விஜய்யை இவர்கள் கடுமையாக விமர்சித்தால், அவரது ரசிகர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மீண்டும் திமுக பக்கமே சென்றுவிடக்கூடும் என்ற அச்சம் இந்த கட்சிகளுக்கு உள்ளது.
 
குறிப்பாக, திமுகவின் கோட்டையாக கருதப்படும் சிறுபான்மையினர் மற்றும் இளைஞர் வாக்குகளை விஜய் பிரிப்பது, மறைமுகமாக எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமையும். விஜய் வாக்குகளை பிரிப்பதன் மூலம் திமுகவின் வெற்றி விகிதம் குறையும் என்பதால், "விஜய்யை விமர்சிக்க வேண்டாம்" என்று பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தனது கட்சி நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 
 
விஜய்யை ஒரு 'கேம் ஸ்பாய்லர்'  என்று அவர் குறிப்பிட்டது, விஜய்யின் வாக்கு வங்கி திமுகவின் வெற்றியை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பையே காட்டுகிறது. இந்த 'மௌன வியூகம்' மூலம் திமுகவின் பலத்தை குறைத்து, தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
 
Edited by Siva