திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (07:51 IST)

பவானி தேவிக்கு தங்க செயின் பரிசளித்த நடிகர் சசிகுமார்!

பவானி தேவிக்கு தங்க செயின் பரிசளித்த நடிகர் சசிகுமார்!
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானிதேவி வாள்வீச்சு போட்டியில் பங்கேற்றார். அவருக்கு பதக்கம் கிடைக்கவில்லை என்றாலும் அவரது முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவியை அவரது வீட்டில் நடிகர் சசிகுமார் சந்தித்தார். தங்க செயினை அவருக்கு பரிசளித்து விடாமுயற்சியுடன் போராடுங்கள் அடுத்த முறை கண்டிப்பாக பதக்கத்தை வெல்லலாம் என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தார்.
 
நடிகர் சசிகுமார் தற்போது ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, நானா மற்றும் உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ராஜவம்சம், எம்ஜிஆர் மகன் மற்றும் உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது