வதந்திகளும் கிசுகிசுவும் மக்களை விரைவில் சென்றடைகிறது - தமன்னா பேட்டி
வதந்திகளும் கிசுகிசுவும் மக்களை விரைவில் சென்றடைகிறது - தமன்னா பேட்டி
பாகுபலி என்ற மெகா ஹிட்டுக்குப் பிறகும் தமிழில் தமன்னாவை யோசித்துதான் ஒப்பந்தம் செய்கின்றனர். விரைவில் அவர் நடித்த தோழா வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இந்திப்பட இயக்குனரை காதலிப்பதாக வரும் வதந்தி உள்பட நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
பாகுபலி படம் பற்றி இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறீர்களே...?
பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். அதை என்னுடைய முதல் படம் போல் உணர்கிறேன். அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமவுலி எனக்கு கடவுளாக தெரிகிறார்.
உங்கள் இந்திப்பட வாய்ப்புகள் எப்படி உள்ளன?
எந்த மொழியாக இருந்தாலும் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் தந்தே படங்களை தேர்வு செய்கிறேன். இந்தியிலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ், தெலுங்கில் பெயர் வாங்கியதுபோல் இந்தியிலும் பெயர் வாங்க விரும்புகிறேன்.
உங்கள் லட்சியம்?
நல்ல கதையில், கதாபாத்திரங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை வாங்க வேண்டும்.
இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
தமிழில் நான் நடித்திருக்கும் தோழா விரைவில் வெளியாகிறது. இது தெலுங்கில் ஓபிரி என்ற பெயரில் வெளியாகிறது. கார்த்தி, நாகார்ஜுனுடன் நடித்திருக்கிறேன். சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் தர்மதுரையில் நடித்து வருகிறேன். தர்மதுரையில் கிராமத்து வேடம். மதுரை பெண்ணாக சேலை கட்டி நடித்திருக்கிறேன்.
இந்திப்பட இயக்குனர் சாஜித் கானும் நீங்களும் காதலிப்பதாக ஒரு வதந்தி உள்ளதே?
சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. ஆனால், அது உண்மையில்லை.
இந்த வதந்தி பரவ என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அவர் இயக்கிய ஹிம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன். அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம். படப்பிடிப்பில் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது.
ஆனால், நீங்கள் காதலிப்பதாக அனைவரும் எண்ணுகிறார்களே...?
வதந்திகளும் கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. அதுதான் உண்மை.