1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2015 (19:08 IST)

புலி குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய படம் - ஸ்ருதி

புலி குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய படம் - ஸ்ருதி
ஸ்ருதியின் முதல் படம் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் நல்லவிதமாக அமையவில்லை. இந்த துரதிர்ஷ்டத்தை வெகுவிரைவிலேயே அதிர்ஷ்டமாக்கினார் ஸ்ருதி.


 

 
இந்தி, தெலுங்கில் அவர் நடித்தால் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழில் விஜய்யுடன் புலி, அஜித்துடன் சிவா இயக்கும் படம், சூர்யாவுடன் சிங்கம் 3 என இங்கும் ஸ்ருதி பிஸி.
 
அக்டோபர் 1 புலி வெளியாவதை முன்னிட்டி ஸ்ருதி பேட்டியளித்தார். 
 
புலி படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
 
புலியில் நடித்தது நிச்சயம் வித்தியாசமான அனுபவம். இந்தப் படம் எனக்கு மட்டுமில்லை, ரசிகர்களுக்கும் நல்ல படமாக அமையும். அதற்குரிய அம்சங்கள் இந்தப் படத்தில் நிறைய உள்ளன.
 
விஜய்யுடன் நடித்தது பற்றி...?
 
விஜய் எவ்வளவு பெரிய நடிகர். அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம்.
 
படப்பிடிப்பு தளத்தில் விஜய் எப்படி நடந்து கொண்டார்?
 
விஜய் மிகப்பெரிய நடிகர் என்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க..

அமைதியாக இருப்பார். அவருடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார். அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார். எப்போதும் நல்ல சிந்தனையுடன் செயல்படுவார்.
 
படம் எப்படி வந்துள்ளது?
 
படம் சிறப்பாக வந்திருக்கிறது. நிச்சயம் இது குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய நல்ல படம். பார்ப்பவர்களுக்கு கண்கவர் விருந்தாக இருக்கும். 

புலி குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய படம் - ஸ்ருதி

 

 
ஸ்ரீதேவியுடன் நடித்தது பற்றி சொல்லுங்கள்...?
 
ஸ்ரீதேவியுடன் புலியில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவரைப் பார்த்துதான் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களை கவர்வது எப்படி என்பதை கற்றுக் கொண்டேன். அதற்கு ஏற்ப என்னை நான் மாற்றிக் கொண்டேன். 
 
படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் என்ன? விஜய்க்கு யார் ஜோடி, நீங்களா, ஹன்சிகாவா?
 
நான் இதுவரை நடித்திராத வேடம் புலியில். எனக்குப் பிடித்தது போலவே எல்லாருக்கும் பிடிக்கும். படம் இன்னும் வெளியாகாத நிலையில், அதிகமாக கேரக்டர் பற்றி கூற முடியாது. ஜோடி பற்றிய கேள்விக்கும் இதே பதில்தான்.
 
அடுத்து என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
 
அஜித்துடன் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். ஹரி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுதவிர தெலுங்கு, இந்திப் படங்களில் நடிக்கிறேன்.