திங்கள், 15 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (12:46 IST)

அதை தினமும் செய்தால் ஆசீர்வாதம் பெருகும் - மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை!

அதை தினமும் செய்தால் ஆசீர்வாதம் பெருகும் - மாணவர்களுக்கு நயன்தாரா அறிவுரை!
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாடக்கை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தையை பெற்றார். 
 
சத்யபாமா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நயன்தாரா, மாணவர்களுக்கு நிறைய அறிவுரைகளை கூறினார். 
 
”கல்லூரி காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியவை. 
 
எனவே நல்ல நண்பர்களுடன் பழகுங்கள். எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் எப்போதும் பணிவுடன் இருங்கள்” அது உங்கள் வாழ்க்கையை அழகாகக்கும்.
 
முக்கியமாக பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். தினமும் அவர்களுடன் 10 நிமிடம் செலவழியுங்கள் அந்த மகிழ்ச்சி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும் என கூறினார்.
 
படிப்பை முடித்துவிட்டு வெளியில் செல்லும் போது திறமையானவராக இருப்பதை காட்டிலும் நல்ல மனிதராக இருப்பது முக்கிய என்றார்.