சூப்பர் கியூட்.. செம ஹாட்!.. லைக்ஸ்களை குவிக்கும் நயன்தாராவின் ரீசண்ட் கிளிக்ஸ்!..
ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. அதன்பின் தொடர்ந்து பல படங்களை நடித்து ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார். இவரை லேடி சூப்பர் ஸ்டார் எனவும் ரசிகர்கள் அழைக்க துவங்கினார்கள்..
ரஜினி, விஜய் அஜித், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, விஷால், ஜெயம் ரவி என எல்லா கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறினார்..
ஒரு கட்டத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அதிலும் சில படங்கள் வெற்றி பெற்றன. நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அந்த பட இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார்..
தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி விட்டாலும் அப்போது தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.